• 1.jpg
  • 2.jpg
  • 3.jpg
  • 4.jpg
  • 5.jpg
  • 6.jpg
  • 7.jpg
  • 8.jpg

பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை மேம்படுத்தும் நோக்கில் எமது கல்லூரியின் பிரான்ஸ் OSA தலைவரின் தாயார் திருமதி தர்மராசா சுபேந்திரா என்பவரினால் Multi-Media Projector ஒன்று 19.10.2016 அன்று கல்லூரி முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. இவ் அன்பளிப்பை செய்தமையினையிட்டு கல்லூரிச் சமூகம் அவருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றது.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மெய்வல்லுநர்போட்டிகளில் எமது கல்லூரி மாணவர்கள் இந்துக்கல்லூரி வரலாற்றில் முதற்தடவையாக தேசிய ரீதியில் பதக்கங்களை் பெற்று சாதனைபடைத்துள்ளனர். அவர்களை கௌரவிக்கும் முகமாக கல்லூரிச் சமூகத்தினரால் 18.10.2016 அன்று கௌரவிப்பு விழா நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் சாதனை வெற்றி வீரர்கள் போட்டிகளை நிறைவு செய்து வரும் வழியில் மீசாலை புத்தூர்ச் சந்தியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு அழைத்துவரப்பட்டனர். அழைத்துவரப்படும் வழியில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவர்கள், சாவகச்சேரி இந்து ஆரம்ப்ப பாடசாலை மாணவர்கள், எமது கல்லூரி மாணவர்கள் அனைவரும் A9 வீதியின் இருமருங்கிலும் நின்று கைதட்டி ஓசை எழுப்ப எமது கல்லூரி மாணவர்களின் மேலத்தேய வாத்திய இசையுடன் சாதனை வீரர்கள் எமது கல்லூரி வளாகம் வரை வீதியுலாவாக அழைத்துவரப்பட்டனர். அதன் பின்னர் கௌரவிப்பு நிகழ்வுகள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கௌரவிப்பு நிகழ்வில் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் திரு அ.கயிலாயபிள்ளை அவர்களும், முன்னைநாள் பிரதி அதிபர் ந. பாலச்சந்திரன் அவர்களும், கௌரவ மாகாண சபை உறுப்பினர்களான க.அருந்தவபாலன் அவர்களும், கே.சயந்தன் அவர்களும், மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், எமது கல்லூரி அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பிரதான மண்டபத்தில் ஒன்று கூடியிருந்தனர். நிகழ்வில் சாதனை வீரர்கள் விருந்தினர்களினால் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுப் பரிசில்கள்
வழங்கியதோடு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

மேலும் இம்மாணவர்களின் சாதனைகளுக்கு காரணகர்த்தாவும் எமது கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியருமான திரு பா.மதனரூபன் அவர்ளையும், இம்மாணவ்களின் பயிற்றுவிப்பாளரும் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தலில் யாழ்மாவட்டத்திற்கு முதலாவது தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொடுத்தவருமாகிய திரு K.கனாதீபன் அவர்களையும் விருந்தினர்கள் நினைவுப் பரிசுகளும், பொன்னாடையும் போர்தியும் கௌரவித்ததோடு சாதனை வீரர்களின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள்.
சாதனை வீரர்களும் அவர்களின் சாதனைகளும்.

puviசெல்வன் A.புவிதரன் - 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் 3.80 Meter உயரம் பாய்ந்து முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

 

puviசெல்வி S.சங்கவி - 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் 2.60 Meter உயரம் பாய்ந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளதோடு தட்டெறிதல் ,ஈட்டி எறிதல் ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் இம் மாணவி வர்ணச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

puviசெல்வி B.கிரிஐா - 19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் 2.70 Meter உயரம் பாய்ந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றுள்ளார்.

 

 

puviதிரு பா.மதனரூபன் - இம்மாணவர்களின் சாதனைகளின் காரணகர்த்தாவும் எமது கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியரும்.

 

 

 

puviதிரு K.கனாதீபன் - இம்மாணவர்களின் பயிற்றுவிப்பாளரும் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தலில் யாழ்மாவட்டத்திற்கு முதலாவது தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொடுத்தவரும்.

தேசிய ரீதியில் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் விளையாட்டுப் போட்டி  நிகழவுகளில் எமது கல்லூரி மாணவர்கள் வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அதில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் எமது கல்லூரி மாணவன் செல்வன் புவிதரன் முதலாம் இடத்தைப் பெற்று சாவகச்சேரி இந்துக் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக தேசிய ரீதியல் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் எமது கல்லூரி மாணவி செல்வி ச.சங்கவி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளதோடு தட்டெறிதல் ,ஈட்டி எறிதல் ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும்   இம் மாணவி வர்ணச் சான்றிதழ்களையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் 19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இடம்பெற்ற கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் எமது கல்லூரி மாணவி செல்வி கிரிஐா மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்  பதக்கத்தினைப் பெற்றுள்ளார். இம்மாணவர்களைப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் கணாதீபனுக்கும் பொறுப்பாசிரியர் மதனரூபனுக்கும் கல்லூரிச் சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றது.

அகில இலங்கை ரீதியல் இடம்பெற்ற தேசியமட்ட கபடி போட்டியில் எமது கல்லூரி கபடி அணியின் 15 வயது ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தினைப பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் ப.சுரேஸ் அவர்களுக்கு பாடசாலைச் சமூகம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றது.