We have 3 guests online

தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா - 2015

எமது கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் 26.02.2015 அன்று காலை 9.30 மணியளவில் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சருடன் மகளிர் விவகார பிரதியமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களும், வடமாகாண கல்வியமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்களும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கல்வி இராஜாங்க அமைச்சர் குழுவில் அவ்வமைச்சின் செயளாலர் டக்ளஸ் நாணயக்கார அவர்களும், அமைச்சின் கல்விப் பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் அவர்களும் தேசிய பாடசாலைகளின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எல்.சிவராஜ் அவர்களும் தமிழ்பிரிவு பணிப்பாளர் எஸ்.முரளிதரன் அவர்களும் மற்றும் அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். வட மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயளாலர் சி.சத்தியசீலன் அவர்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆ.இராஜேந்திரன் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திறப்பு விழாவினை தொடர்ந்து கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சரும், மகளிர் விவகார பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர் சரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் சிறப்புரையாற்றினர். இவர்களுக்கு கல்லூரி முதல்வரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சரின் வருகையினையொட்டி அவர்களினால் போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும் கற்றல் உபகரணங்களும் கல்லூரிக்கு கையளிக்கப்பட்டன.
 

புதிய அதிபர் பதவியேற்பு

எமது கல்லுரியின் புதிய அதிபராக திரு நடராஜா சர்வேஸ்வரன் (B.com, Dip.in Edu, SLES - 3) அவர்கள் 23-02-2015 அன்று மாலை பதவியேற்றுள்ளார். இவர் 111 வருட கால வரலாற்றைக் கொண்ட எமது கல்லூரியின் 19 ஆவது அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கான வரவேற்பு நிகழ்வினை இன்று (24-02-2015) கல்லூரிச் சமூகம் நடாத்தியிருந்தது.
 

மணிவிழா - 2015

எமது கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் திரு.அ.கயிலாயபிள்ளை அவர்களின் மணிவிழா நிகழ்வுகள் இன்று (22.02.2015) கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரி பிரதி அதிபர் திரு.ந.பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வானது விழா நாயகனை சங்கத்தானை வைரவசுவாமி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து மங்கள வாத்திய சகிதம் கல்லூரி பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆரம்பமானது.
நிகழ்வில் வரவேற்புரையை பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் ஆ.தங்கவேலுவும் ஆசியுரையை தென்மராட்சியின் மூத்த சிவாச்சாரியார் சி.சிதம்பரநாதக்குருக்களும் வழங்கினர். கல்விசார் பிரமுகர்களின் வாழ்த்துரைகளைத் தொடர்ந்து கயிலைவாசம் என்ற மணிவிழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் வெளியீட்டுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் ஆற்றினார். வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா நூலை வெளியிட்டு வைத்தார். பாடசாலை நடன ஆசிரியர் சுபா குகேந்திரனின் நெறியாள்கையில் மாணவியர் வழங்கிய நடன ஆற்றுகைகள் இடம்பெற்றன.
நிகழ்வின் சிறப்பம்சமாக சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் 111 வருட வரலாற்றில் அதிபர்களாகச் சேவையாற்றியவர்களின் ஒளி ஓவியக் கையளிப்பும் திறந்து வைத்தலும் இடம்பெற்றது. இந்த ஓவியங்களை பாடசாலையின் ஆசிரியர் எஸ்.செல்வரமணன் வரைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துரைகள் வரிசையில் பாடசாலையின் ஆசிரியர் கழகத் தலைவர் க.ஜெயவீரசிங்கம், முன்னாள் அதிபர் இ.கயிலைநாதன், தென்மராட்சி அதிபர் சங்கத் தலைவர் க.அருந்தவபாலன், சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத் தலைவர் லயன் வ.ஸ்ரீபிரகாஸ், வடமாகாண அதிபர் சங்கத் தலைவர் சி.சிவனேஸ்வரன், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஸ்ணகுமார், முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராஜா, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் கு.பிறேமகாந்தன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், பேராசிரியர் ப.புஸ்பரத்தினம், பேராசிரியர் கா.குகபாலன், பேராசிரியர் க.கந்தசாமி, பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, வடமாகாணசபை உறுப்பினர் கே.சஜந்தன், வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் கல்விப் பணிப்பாளருமாகிய ப.அரியரத்தினம், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் விழாநாயகரின் பணிகளை நயந்தும் தமக்கும் அவருக்கும் உள்ள தொடர்புகளை விதந்தும் உரையாற்றினர்.
 

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி - 2015

எமது கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று (13-02-2015) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி பிரதி அதிபர் திரு ந.பாலச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு அருணாசலம் கயிலாயபிள்ளை (எமது கல்லூரி ஓய்வுநிலை அதிபர்) அவர்களும் வெற்றி வீரர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவிப்பதற்காக திருமதி திலகவதி கயிலாயபிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவின்படி இல்லங்களின் நிலைகள்.

ஆனந்தா - முதலாமிடம்(227 புள்ளிகள்),

தாமோதரம்- இரண்டாமிடம் (224 புள்ளிகள்)

நேரு- மூன்றாமிடம் (188 புள்ளிகள்).

முத்துக்குமாரு- நான்காமிடம் (170 புள்ளிகள்).

ஸ்ரீசுமங்கலா - ஐந்தாமிடம் (151 புள்ளிகள்).

 

நிறுவுநர் நாள் நிகழ்வுகள் - 2015

எமது கல்லூரி நிறுவுநர் அமரர் வி.தாமோதரம்பிள்ளை அவர்களை நினைவு கூருமுகமாக கல்லூரி நிறுவுநர் தினம் இன்று (05-02-2015) காலை 9:00 மணியளவில் கல்லூரி பிரதி அதிபர் திரு ந.பாலச்சந்திரன் தலைமையில் அருணாசலம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக ம.தெய்வேந்திரராஜா (உதவிச் செயளாலர், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு சு.கிருஷ்ணகுமார் (வலயக் கல்விப்பணிப்பாளர் - தென்மராட்சி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிறுவுநர் நினைவுப் பேருரையினை பேராசிரியர் தி.வேல்நம்பி (பீடாதிபதி, முகாமைத்துவக் கற்கை நெறிப்பீடம், யாழ் பல்கலைக்கழகம்) அவா்கள் ஆற்றினார். தாமோரன் சஞ்சிகையின் முதற்பிரதியினை முதன்மை விருந்தினர் ம.தெய்வேந்திரராஜா அவர்கள் வெளியிட்டு வைக்க அதனை திரு திரு அ.ரமணீதரன் (பொறுப்பதிகாரி, விதை அத்தாட்சிப்படுத்தும் சேவை, விவசாயத்தினைக்களம், யாழ்ப்பாணம்) அவர்கள் பெற்றுக் கொண்டார். தாமோதரன் மலர் ஆய்வுரையினை திரு கு.சிவானந்தம் (கோட்டக் கல்வி அலுவலர், சாவகச்சேரி)அவர்கள் நிகழ்த்தினார்.


இந் நிகழ்வில் கல்லூரி பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், வலயக் கல்வி, கோட்டக் கல்வி அலுவலர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 16

Our Founder
Banner
Our Principal
Banner
User Login